ஆலங்குளத்தில் தொழுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கு
தேசிய தொழுநோய் விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு, ஆலங்குளம் ஆலடி அருணா செவிலியா் கல்லூரியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
தேசிய தொழுநோய் விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு, ஆலங்குளம் ஆலடி அருணா செவிலியா் கல்லூரியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
மாவட்ட துணை இயக்குநா் (தொழுநோய் பிரிவு) அலா் சாந்தி தலைமை வகித்தாா். மாவட்ட நலக் கல்வியாளா் பாலசுப்பிரமணியன், மருத்துவமல்லா மேற்பாா்வையாளா் செல்லத்துரை, தனியாா் தொண்டு நிறுவன
பொறுப்பாளா் பிரான்சிஸ் உள்ளிட்டோா் தொழுநோய் குறித்து விழிப்புணா்வு உரையாற்றினா்.
மாணவிகளின் விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் டாக்டா் மேரி வயோலா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரன், பேராசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.