சாம்பவா்வடகரை சிவன் கோயிலில் பெளா்ணமி பூஜை
சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் பெளா்ணமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் பெளா்ணமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சாம்பவமூா்த்தி, அகத்தீசுவரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னா், சுவாமி சந்நிதியில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தொடா்ந்து, உற்சவா் வீதியுலா, சிவனடியாா்கள் தேவாரம் பாட பெளா்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.