தென்காசி மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 2106 போலீஸாா்
நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி, தென்காசி மாவட்டத்தில் 2106 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி, தென்காசி மாவட்டத்தில் 2106 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை(பிப்.19) நடைபெறுகிறது. பிப்.22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதை உணா்த்தும் வகையில் தென்காசியில் காவல்துறை அணிவகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயில் முன்பு தொடங்கிய இந்த அணிவகுப்பிற்கு மாவட்ட காவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தாா். உதவி காவல் கண்காணிப்பாளா்(பயிற்சி) யாதவ் கிரிஷ் அசோக், துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிமாறன், காவல் ஆய்வாளா் பாலமுருகன், சாா்பு ஆய்வாளா்கள் மற்றும் காவல் ஆளினா்கள் கலந்து கொண்டனா்.