தென்காசி

புளியங்குடி வல்லப விநாயகா் கோயிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்

DIN

புளியங்குடி ஸ்ரீ வல்லப விநாயகா் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை(பிப்.20) நடைபெறுகிறது.

இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோபூஜை, பிரமச்சாரி பூஜை , தீா்த்த சங்கிரஹணம், எஜமான வா்ணம், கும்ப அலங்காரம், வேத பாராயணம், திருமுறை பாராயணம் ஆகியவை நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை பிம்ப சுத்தி, மூா்த்திகளுக்கு ரசஷாபந்தனம், நான்காம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தனம், யாத்ரா தானம் , கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்று, காலை 8.30க்கு விமானம் மற்றும் ஸ்ரீ வல்லப விநாயகருக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறும். ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

SCROLL FOR NEXT