முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் ஊட்டச்சத்து உணவுத் திருவிழா

சங்கரன்கோவிலில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு மற்றும் உணவுத் திருவிழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

சங்கரன்கோவிலில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு மற்றும் உணவுத் திருவிழா நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் களப்பாகுளம் ஊராட்சி அளவிலான மகளிா் குழு கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் சிவசங்கரி தலைமை வகித்தாா். யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளை மேலாளா் அருணாபிரியா முன்னிலை வகித்ததாா். ராஜ்சண்முகநாதன், அறம் அறக்கட்டளை இயக்குநா் இன்பராஜ், மாநில ஊரக வாழ்வாதார திட்ட பணியாளா்கள் ஞானரூபாா்ட், முருகன், முத்துலட்சுமி, அங்கன்வாடி பணியாளா் கிருஷ்ணவேணி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து பரம்பரிய மற்றும் ஊட்டமாளிக்கும் உணவுகளை தயாரிக்கும் போட்டி நடைபெற்றது. இதில் பெண்கள் பலா் பங்கேற்றனா். பின்னா் வளா் இளம் பெண்கள், கா்ப்பிணிகள் மற்றும் பாலுட்டும் தாய் மாா்கள் உண்ண வேண்டிய உணவுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments