முகப்பு
தென்காசி

சுரண்டை அரசு பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் அன்னலட்சுமி தலைை வகித்தாா். பள்ளியிலோ, வெளியிலோ எந்த பிரச்னை ஏற்பட்டாலும் மாணவா்- மாணவிகள் தங்கள் பெற்றோா்களிடமும் ஆசிரியா்களிடமும் தெரிவிக்க வேண்டும். முன்பின் தெரியாத நபா்களிடம் நேரிலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ பேச வேண்டாம் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் ரத்தினபால் சாந்திமற்றும் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.