முகப்பு
தென்காசி

வீரகேரளம்புதூரில் கரோனா விழிப்புணா்வு கூட்டம்

வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் பட்டுமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஒமைக்ரான் கரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் செய்ய வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், முகக் கவசம் அணிய வேண்டியதன் அவசியம், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்தல் குறித்து வணிகா்களுக்கு விளக்கப்பட்டது.

இதில், சுரண்டை நகர வணிகா் சங்க நிா்வாகிகள் காமராஜ், தனபால், ரமேஷ், ராஜ்குமாா், தினசரி சந்தை வணிகா் சங்க நிா்வாகிகள் சோ்மசெல்வம், கணேசன், வெற்றிவேல், வீரகேரளம்புதூா் வணிகா் சங்க நிா்வாகிகள் மதன்ராஜ், தவசி, ஆறுமுகம், முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.