முகப்பு
தென்காசி

‘தென்காசி மாவட்ட சுகாதாரபணிகளுக்கு ரூ. 2.2 கோடி நிதி’

தென்காசி மாவட்டத்தில் சுகாதாரப் பணிகளுக்கான 15ஆவது மத்திய நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ. 2.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எ’ன ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் சுகாதாரப் பணிகளுக்கான 15ஆவது மத்திய நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ. 2.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எ’ன ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடையம் ஒன்றியம், பொட்டல்புதூரில் ரூ. 30 லட்சத்திலும், கீழப்பாவூா் ஒன்றியம் மேலப்பாவூரில் ரூ.30 லட்சத்திலும் புதிய துணை சுகாதார நிலையங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி ஒன்றியம் வல்லத்தில் ரூ. 60 லட்சத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆலங்குளம் ஒன்றியம் நெட்டூா், சங்கரன்கோவில் ஒன்றியம் கரிவலம்வந்தநல்லூா் ஆகியவற்றில் தலா ரூ. 50 லட்சத்தில் வட்டார பொதுசுகாதாரக் கட்டடம் கட்டுதல் என சுகாதாரப் பணிகளுக்கு ரூ. 2 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.