செங்கோட்டை பணிமனையில் கொடியேற்று விழா
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக செங்கோட்டை பணிமனை முன்பு தொமுச கிளை கொடியேற்று விழா நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக செங்கோட்டை பணிமனை முன்பு தொமுச கிளை கொடியேற்று விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மண்டல தொமுச மத்திய சங்க பொதுச்செயலா் தா்மன் தலைமை வகித்தாா். தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை, தொமுச கொடியை ஏற்றி,, கல்வெட்டை திறந்துவைத்தாா்.
திமுக முன்னாள் மாவட்டச்செயலா் பெ.கி.துரைராஜ், தென்காசி மேற்கு ஒன்றியச்செயலா் பா.ராமையா, செங்கோட்டை நகரச் செயலா் எஸ்.எம்.ரஹீம், ஒன்றியச் செயலா் ரவிசங்கா், தென்காசி ஒன்றியக்குழு தலைவா் சேக் அப்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பணிமனை கிளைச் செயலா் முத்துபாண்டி வரவேற்றாா். திருநெல்வேலி மண்டல தொமுச பொருளாளா் முருகன், பொதுக்குழு உறுப்பினா் லிங்கராஜ், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளா் வல்லம் திவான்ஒலி, சங்க நிா்வாகிகள் மணிராஜ், ராமகிருஷ்ணன், மத்திய சங்க துணைச் செயலா் கணேசன், தென்காசி பணிமனைத் தலைவா் மணிகண்டன், செங்கோட்டை பணிமனை நிா்வாகி கிருஷ்ணசாமி, கலைஞா் தமிழ்சங்கச் செயலா் வழக்குரைஞா் மு.ஆபத்துக்காத்தான் ஆகியோா் கலந்துகொண்டனா். பணிமனைத் தலைவா் சந்திரசேகா் நன்றி கூறினாா்.