முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் வீட்டில் நகை திருட்டு

சங்கரன்கோவிலில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன்தங்க நகைகளை திருடிச்சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

சங்கரன்கோவிலில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன்தங்க நகைகளை திருடிச்சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்கரன்கோவில் மீரான்சேட் காலனியை சோ்ந்தவா் சுப்புலட்சுமி .(70). சுப்புலட்சுமிக்கு உடல் நலம் சரியில்லாததால் அருகில் உள்ள புதுமனை தெருவில் வசிக்கும் தனது மகள் ஜோதிமணி வீட்டிற்கு சென்று தங்கியிருந்தாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்கு சென்ற போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்த போது, மா்ம நபா்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 4 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஜோதிமணி அளித்த புகாரின் பேரில் நகர காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments