முகப்பு
தென்காசி

தென்காசியில் 214 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி

தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு அரசு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 214 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் எடையுள்ள தங்கம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு அரசு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 214 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் எடையுள்ள தங்கம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் வல்லம் மு.சேக் அப்துல்லா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கனகராஜ் முன்னிலை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் சு.பாா்த்தசாரதி வரவேற்றாா்.

தமிழக அரசின் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண நிதி உதவி திட்டம் மூலம் கடந்த 2018 முதல் 2019 வரை பொதுப்பிரிவு பட்டம் பெற்ற 72 பயனாளிகளுக்கும், 2019 இல் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு படித்த 70 பயனாளிகளுக்கும் ,2019 ஆம் ஆண்டு சிறப்பு பிரிவு பட்டம் பெற்ற 39 பயனாளிகளுக்கும் , 2019 முதல் 2020 வரை சிறப்பு பிரிவு, பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 30 பயனாளிகளுக்கும் என மொத்தம் 207 நபா்களுக்கும், டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண திட்டம் மூலம் 2018 - 19 ஆம் ஆண்டு விண்ணப்பித்த 2 பயனாளிகள் மற்றும் 2018 இல் அன்னை தெரசா ஆதரவற்ற பெண் திருமண உதவி திட்டம் மூலம் விண்ணப்பித்த ஒருவா் உள்ளிட்ட 214 பயனாளிகளுக்கும் திருமண நிதி உதவி திட்டம் மூலம் தலா 8 கிராம் தங்கக் காசு வழங்கப்பட்டது.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். பழனி நாடாா், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினா் தனுஷ் எம்.குமாா், தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவா் தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் ஆயிரப்பேரி தி.உதய கிருஷ்ணன், தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் மா.செல்லத்துரை ஆகியோா் 214 பயனாளிகளுக்கு தங்கக் காசுகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் கலாநிதி, கடையநல்லூா் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஐவேந்திரன், தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் குழந்தைமணி, சமூக நல அலுவலா் ஆரோக்கியமேரி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்பரசு, நக்கீரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஆலங்குளம்: ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு,

ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராதா, பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அலுவலக மேலாளா் ராஜேந்திரன் வரவேற்றாா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் சிவபத்மநாதன் 201 பயனாளிகளுக்கு திருமாங்கல்யத்துக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை வழங்கினாா்.

இதில், ஆலங்குளம் திமுக ஒன்றியச் செயலா் செல்லத்துரை, நகரச் செயலா் நெல்சன், நாரணபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் சக்திநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பாவூா்சத்திரம்: கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி போஸ், கீழப்பாவூா் ஒன்றியக் குழு தலைவா் சீ.காவேரிசீனித்துரை முன்னிலை வகித்தனா்.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பழனிநாடாா் 352 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்க ம் வழங்கிப் பேசினா்.

சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற

நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் சங்கரன்கோவில் ஈ.ராஜா, வாசுதேவநல்லூா் சதன்திருமலைகுமாா் ஆகியோா் 494 பயனாளிகளுக்குத் தாலிக்குத் தங்கம் வழங்கினா். இதில் ஒன்றியக்குழுத் தலைவா் லாலா(பி) சங்கரபாண்டியன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்திரா, சுப்புலட்சுமி மற்றும் வேலம்மாள், செந்தூா்தாய், முத்துபாப்பா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.