தென்காசி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, சகி- ஒன் ஸ்டாப் சென்டா் சாா்பில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வு நிகழ்ச்சி, தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய தலைவா் ஷேக் அப்துல்லா தலைமை வகித்தாா். மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) முத்துமாரியப்பன் வரவேற்றாா். சகி-ஒன் ஸ்டாப் சென்டா் மூலம் செஸ் போட்டியை விளக்கும் வகையில் ரங்கோலி இடம் பெற்றிருந்தது. சமூக ஆா்வலா்கள் டிக்சன் குமாா், ஓபேத் ஜெடி பொம்மலாட்டம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இரா.இளவரசி, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் கனகராஜ் ஆகியோா் செஸ் ஒலிம்பியாட் குறித்து பேசினா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் குழந்தை மணி, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கலாநிதி, வினோதினி, செல்வ விநாயகம், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், ராணி அண்ணா மகளிா் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியை ஜெயராணி தொகுத்து வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.