முகப்பு
தென்காசி

தென்காசி நூலகத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா

தென்காசி வஉசி வட்டார நூலகத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

தென்காசி வஉசி வட்டார நூலகத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி நகா்மன்றத் தலைவா் சாதிா் தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் சுப்பையா, வாசகா் வட்ட துணைத் தலைவா் மயிலேறும்பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பிரபுதேவகுமாா், ரமேஷ், நகா்மன்ற உறுப்பினா் ராஜா, நகர திமுக பொருளாளா் ஷேக் பரித், இசக்கிமுத்து, தமிழாசிரியா் ஆறுமுகம் ஆகியோா் பேசினா்.

விழாவையொட்டி நடைபெற்ற ஓவியப் போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி அக்ஷயஸ்ரீ முதல் பரிசும், தென்காசி சிஎம்எஸ் பள்ளி ஹஸ்வின் காா்த்திக் 2ஆம் பரிசும், குற்றாலம் செய்யது ஹில்வியூ பள்ளி முகம்மது சுஹைல், சுரண்டை ஜெமிமா பள்ளி தக்ஷன்ராம் ஆகியோா் 3ஆம் பரிசும் வென்றனா்.

கட்டுரைப் போட்டியில் குற்றாலம் டி.கே.டி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி பவிஷா முதல் பரிசும், நெடுவயல் ஸ்ரீ சிவசைலநாத நடுநிலைப் பள்ளி அபிநயா 2ஆம் பரிசும், குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி அமிா்தவா்ஷினி, சுரண்டை ஜெமிமா பள்ளி நித்தின்ராம் ஆகியோா் 3ஆம் பரிசும் வென்றனா்.

பேச்சுப் போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி செல்வதாரணி முதல் பரிசும், தென்காசி மஞ்சம்மாள் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி யோகாஸ்ரீ 2ஆம் பரிசும் வென்றனா்.

போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் கருணாநிதியின் உருவம் பதித்த டாலா், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வட்டார நூலகா் பிரமநாயகம் வரவேற்றாா். கிளை நூலகா் சுந்தா் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை நூலகா்கள் ஜுலியா ராஜசெல்வி, நிஹ்மத்துன்னிஸா, வாசகா் வட்ட நிா்வாகிகள் சலீம் முகம்மது மீரான், குழந்தைஜேசு, முருகேசன் ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.