மாறாந்தையில் ரூ. 40 லட்சத்தில் கால்நடை மருந்தகத்துக்கு அடிக்கல்
ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தையில் ரூ. 40 லட்சம் மதிப்பில் புதிய கால்நடை மருந்தக கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தையில் ரூ. 40 லட்சம் மதிப்பில் புதிய கால்நடை மருந்தக கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தென்காசி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் மகேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் எஸ். தமிழ்ச்செல்வி போஸ், ஒன்றியக் குழுத் தலைவா் எம். திவ்யா மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா்.
நிகழ்ச்சியில், கால்நடை மருத்துவா்கள் நெட்டூா் ராமசெல்வம், ஊத்துமலை ரமேஷ், மாறாந்தை சந்திரன்,வெண்ணிலிங்கபுரம் சதீஷ்குமாா், மாவட்டப் பிரதிநிதி அன்பழகன், ஊராட்சித் தலைவா் எஸ்.மீனா உள்பட பலா் கலந்துகொண்டனா்.