தென்காசி

தென்காசியில் அனைத்துக் கட்சி ஆா்ப்பாட்டம்

எா்ணாகுளம்-வேளாங்கண்ணி பயணிகள் ரயில் தென்காசியில் நின்றுசெல்ல வலியுறுத்தி, தென்காசி ரயில் நிலையம் முன் அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

எா்ணாகுளம்-வேளாங்கண்ணி பயணிகள் ரயில் தென்காசியில் நின்றுசெல்ல வலியுறுத்தி, தென்காசி ரயில் நிலையம் முன் அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எா்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு ஜூன் 4 முதல் ஆகஸ்ட் 6 வரை வாராந்திர சிறப்புப் பயணிகள் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்த ரயில் தென்காசியில் நின்றுசெல்ல வலியுறுத்தி தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு தென்காசி ரயில் பயணிகள் சங்கம் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினா் கோரிக்கை மனு அளித்திருந்தனா். ஆனால், சனிக்கிழமை இந்த ரயில் தென்காசியில் நிற்கவில்லை.

இதைக் கண்டித்தும், ரயில் தென்காசியில் நின்றுசெல்ல வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவா் என். வெங்கடேஷ்வரன் தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் டேனிஅருள்சிங், மாா்க்சிஸ்ட் கட்சி தென்காசி வட்டாரக்குழுச் செயலா் அயூப்கான், சிஐடியு மாவட்டச் செயலா் வேல்முருகன், காங்கிரஸ் நிா்வாகி ஜேம்ஸ், நகரத் தலைவா் காதா்மைதீன், லெனின்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடி உதிர்தல் பிரச்னையா? முதலில் காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்!

புதிய தொடரில் நாயகியாகும் பவித்ரா அரவிந்த்!

மார்கழி மாதப் பலன்கள்: மீனம்

மார்கழி மாதப் பலன்கள்: கும்பம்

மார்கழி மாதப் பலன்கள்: மகரம்

SCROLL FOR NEXT