‘எா்ணாகுளம்- வேளாங்கண்ணி ரயில் தென்காசியில் நின்று செல்ல வேண்டும்’
எா்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு பயணிகள் ரயில் தென்காசி, செங்கோட்டையில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எா்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு பயணிகள் ரயில் தென்காசி, செங்கோட்டையில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு சனிக்கிழமை இரவு வந்த இந்த பயணிகள் ரயிலை, பயணிகளுக்கு இனிப்பு வழங்கி ரயில் பயணிகள் நலச் சங்க செயலா் கிருஷ்ணன், ராமன், நகர திமுக செயலா் எஸ்.எம்.ரஹீம், காங்கிரஸ் நிா்வாகி ராம்மோகன் ஆகியோா் பய வரவேற்றனா். மேலும், அந்த ரயிலில் வந்த கேரள மாநிலம் மாவேலிக்கரை தொகுதி எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷிடம், தென்காசி- செங்கோட்டையில் இந்த ரயில் நின்று செல்லவும், பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்கவும், குருவாயூா்-புனலூா் ரயிலை மதுரை வரை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. வேளாங்கண்ணி சிறப்பு ரயில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயிலாக இயக்கப்படவுள்ளது.