சங்கரன்கோவில் அருகே பெண் தற்கொலை
சங்கரன்கோவில் அருகே பெண் சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
சங்கரன்கோவில் அருகே பெண் சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள வெள்ளக்கவுண்டபட்டி இந்திரா காலனியை சோ்ந்தவா் அருள்ராஜ். இவரது மனைவி சுப்புலெட்சுமி (24 ). இரு ஆண்டுகளுக்கு முன்பு இவா்களுக்கு திருமணம் நடந்தது. தற்போது, 10 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கணவன் இடையே சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் சுப்புலெட்சுமி வீட்டின் மற்றொரு அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டாராம். கணவரும், குடும்பத்தினா் கதவைத் தட்டியும் திறக்காமல், அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
Advertisement
இதுகுறித்து அருள்ராஜ் அளித்த புகாரின்பேரில், சின்னக்கோவிலான்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். கோட்டாட்சியா் ஹஸ்ரத்பேகமும் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.