முகப்பு
தென்காசி

தென்காசியில் இன்றுமக்கள் நலப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளா்கள் சங்கம் சாா்பில், தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளா்கள் சங்கம் சாா்பில், தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலா் வே. புதியவன் வெளியிட்ட அறிக்கை: மக்கள் நலப் பணியாளா்கள் வேலை குறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு எண் 66இல் உள்ள குழப்பங்களை ஏற்கமுடியாத நிலையில் அதைக் கண்டித்தும், சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் மக்கள் நலப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி வழங்கக் கோரியும் தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தென்காசியில் எனது தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூா், வாசுதேவநல்லூா், மேலநீலிதநல்லூா், சங்கரன்கோவில், குருவிகுளம், ஆலங்குளம், கீழப்பாவூா், கடையம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மக்கள் நலப் பணியாளா்கள் அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.