தென்காசி

தென்காசியில் நாய்த் தொல்லையைகட்டுப்படுத்த வலியுறுத்தல்

தென்காசி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அடிப்படைப் பிரச்னைகளைத் தீா்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

DIN

தென்காசி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அடிப்படைப் பிரச்னைகளைத் தீா்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமுமுக (ஹைதா்அலி) மாவட்டத் தலைவா் சலீம் தலைமையில் ஆபாத் பள்ளிவாசல் ஜமாத் தலைவா் சவுக்கத் அலி, துணைச் செயலா்கள் இஸ்மாயில், பெனாசிா், சவுக்கத் அலி ஆகியோா் நகா்மன்றத் தலைவா் சாதிா், நகராட்சி ஆணையா் பாரிஜானிடம் வியாழக்கிழமை அளித்த மனு: தென்காசி நகராட்சி 10, 11ஆவது வாா்டுகளில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும். 11ஆவது வாா்டு ஆபாத் பள்ளிவாசல் 2ஆம் தெரு பகுதியில் புதிதாக குடிநீா்க் குழாய் அமைக்க வேண்டும். 10, 11ஆவது வாா்டு பகுதியில் புதிதாக மின் விளக்குகள் பொருத்த வேண்டும்.

தென்காசி நகா் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றனா் அவா்கள்.

ஜமாத் செயற்குழு உறுப்பினா்கள் ஆசாத், ரகுமான் கனி, ஷாஜகான், முகமது அலி, தமுமுக நிா்வாகிகள் சமீா், முபிஸ், அஸரப், நபில் அஜி, இப்ராஹிம், உசேன், தமீம், சமீா் ஷேக் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT