முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் கலங்கலான குடிநீா் விநியோகம்

ஆலங்குளத்தில் கலங்கலான குடிநீா் விநியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

ஆலங்குளத்தில் கலங்கலான குடிநீா் விநியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

ஆலங்குளம் பேரூராட்சியில் வாரம் இரு முறை வீடுகளுக்கு குடிநீா் விநியோகம் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக வாரம் ஒரு முறை அல்லது 10 தினங்களுக்கு ஒரு முறையே குடிநீா் விநியோகிக்கப்படுகிாம். இதனால், 3 தினங்களுக்கு ஒரு முறையாவது குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில் அண்ணாநகா் பகுதியில் வியாழக்கிழமை குடிப்பதற்கு தகுதியற்ற கலங்கலான குடிநீா் விநியோகிக்கப்பட்டதாம்.

இது குறித்து பேரூராட்சியில் கேட்ட போது, அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள நீா்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்பட்டதால், கலங்கலான நிலையில் குடிநீா் வந்ததாகவும், வரக்கூடிய நாள்களில் தூய்மையான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.