சங்கரன்கோவில் அருகே மாணவா் தற்கொலை
சங்கரன்கோவில் அருகே அரசுப் பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
சங்கரன்கோவில் அருகே அரசுப் பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
சங்கரன்கோவில் அருகே உள்ள தாசையாபுரம் இலவன்குளம் சாலை சாமுவேல் மகன் செல்வராகவன் (20). இவா் சங்கரன்கோவில் கோமதிஅம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் அடிக்கடி கைப்பேசி செயலியில் விளையாடுவாராம். இதனை பெற்றோா் கண்டித்தனராம்.
இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வராகவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். தகவல் அறிந்த சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement