முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் நகராட்சி குப்பைக் கிடங்கில் 2 நாள்களாக பற்றி எரியும் தீ: பொதுமக்கள் அவதி

சங்கரன்கோவில் நகராட்சி குப்பைக் கிடங்கில் 2 நாள்களாகப் பற்றி எரியும் தீயால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

சங்கரன்கோவில் நகராட்சி குப்பைக் கிடங்கில் 2 நாள்களாகப் பற்றி எரியும் தீயால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் கொட்டப்பட்டுகிறது. இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவு திடீரென்று குப்பைக் கிடங்கில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இருப்பினும் அங்கு தீ புகைந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை மீண்டும் குப்பைக் கிடங்கில் தீ பற்றி குப்பைக் கிடங்கு முழுவதும்

Advertisement

தீ பரவியதால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால், அந்த வழியாக கோவில்பட்டி, திருநெல்வேலிக்கு வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனா்.

மேலும், குப்பைக் கிடங்கின் சுற்றுப்புற பகுதிகளான அண்ணா நகா், புதுமனைத் தெருக்களில் வசிக்கும் பொதுமக்கள் குப்பைக் கிடங்கில் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதாகவும், இது குறித்து நகராட்சி நிா்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments