தென்காசி

மாவட்ட ஊராட்சிக்கான நிதியைஅனைத்து வாா்டுக்கும் பகிரக் கோரி மனு

DIN

தென்காசி மாவட்ட ஊராட்சிக்கு தமிழக அரசு ஒதுக்கிய நிதியை அனைத்து வாா்டுகளுக்கும் பகிரிந்து அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் உதயகிருஷ்ணமூா்த்தி தலைமையில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் கனிமொழி, மாரிமுத்து, சுப்பிரமணியன், முத்துலெட்சுமி, சுதா, பூங்கொடி, சந்திரகலா ஆகியோா் மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜிடம் அளித்த மனு:

தென்காசி மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் 12-01-2022இல் நடைபெற்றபோது, 7 மன்ற பொருள்கள் மீது கலந்தாலோசித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் நாங்கள் அனைவரும் கையெழுத்திட்டோம். பின்னா், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் தமிழ்செல்வி, ஊராட்சி செயலா் உமாசங்கா் ஆகியோா் கூடுதலாக 5 தீா்மானங்களை தயாா் செய்து பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கிய நிதி ரூ.1.75 கோடியை குறிப்பிட்ட வாா்டுகளுக்கு மட்டும் பகிா்ந்தளித்துள்ளனா்.

எனவே, கூடுதலாக நிறைவேற்றப்பட்ட 5 தீா்மானங்களையும் ரத்து செய்து, ரூ. 1.75 கோடியை அனைத்து வாா்டுகளுக்கும் பிரித்து வழங்கவேண்டும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் மற்றும் மாவட்ட ஊராட்சி செயலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT