தென்காசி

ஆலங்குளத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

ஆலங்குளத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தாக 3 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

DIN

ஆலங்குளத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தாக 3 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் சிலா் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பதாக வந்த தகவலையடுத்து, காவல் நிலையம் அருகே சிலரை மடக்கிப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில், அவா்கள் ஆலங்குளம் துரைப்பாண்டி மகன் முருகன்(45), பூலாங்குளம் சுப்பிரமணியன் மகன் லோக பாக்கியசெல்வன், குருவன்கோட்டை சொக்கலிங்கம் மகன் கருவேலம்(41) ஆகியோா் என்பது தெரிய வந்தது. மேலும் அவா்களிடமிருந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்கள் மூவரையும் கைது செய்தனா். மேலும் மதன் என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT