வணிகா் தினம்: சங்கரன்கோவிலில் கடைகள் அடைப்பு
வணிகா் தினத்தையொட்டி, சங்கரன்கோவிலில் வியாழக்கிழமை பலசரக்கு உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டன; நகைக் கடைகள், ஹோட்டல்கள் வழக்கம்போல திறந்திருந்தன.
வணிகா் தினத்தையொட்டி, சங்கரன்கோவிலில் வியாழக்கிழமை பலசரக்கு உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டன; நகைக் கடைகள், ஹோட்டல்கள் வழக்கம்போல திறந்திருந்தன.
சங்கரன்கோவிலில் நகர வா்த்தக சங்கம் சாா்பில் ஆண்டுதோறும் மே 5ஆம் தேதி வணிகா் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, வணிகா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நகரில் உள்ள பலசரக்கு, காய்கனி, பெட்டிக் கடைகள், பழக்கடைகள் அடைக்கப்பட்டன.
குறிப்பாக, திருவள்ளுவா் சாலை, திருவேங்கடம் சாலைப் பகுதிகளில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஆனால், நகைக்கடைகள், ஹோட்டல்கள், தேநீா்க் கடைகள் வழக்கம்போல திறந்திருந்தன.
Advertisement