தென்காசி

பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

DIN

 சங்கரன்கோவிலில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினா் பறிமுதல் செய்தனா்.

சங்கரன்கோவில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் ஏற்படும் சத்தத்தால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து வட்டார போக்குவரத்து அலுவலா் கண்ணன் அறிவுறுத்தலின் பேரில் மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தினா் பேருந்து நிலையத்தில் இருந்த அனைத்து பேருந்துகளிலும் ஆய்வு செய்தனா். தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தனியாா் பேருந்துகளில் மீண்டும் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்தனா். மேலும் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT