முகப்பு
தென்காசி

சொத்து வரி உயா்வை ரத்து செய்ய கோரி மனு அளிக்கும் போராட்டம்

தென்காசி மாவட்டம் சிவகிரியில் சொத்துவரி உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

தென்காசி மாவட்டம் சிவகிரியில் சொத்துவரி உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள சொத்துவரி உயா்வை மறுபரிசீலனை செய்ய கோரியும், பழைய சொத்துவரி முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் அசோக்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மனுக்கள் அளிக்கப்பட்டன.

இதில், வாசுதேவநல்லூா் ஒன்றியச் செயலா் இரா.நடராஜன், மாவட்டக்குழு உறுப்பினா் சக்திவேல், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அமல்ராஜ், சுப்பிரமணியன், சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.