முகப்பு
தென்காசி

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு: ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருப்பதாக முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீா்செல்வம் குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 13 மே, 2022 at 11:51 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:45 PM

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருப்பதாக முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீா்செல்வம் குற்றஞ்சாட்டினாா்.

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது. நாள்தோறும் பத்திரிகை, தொலைக்காட்சியில் செய்தி வரும் போதுதான், அதன் பின் புலமாக திமுக செயல்படுகிறது தெரிகிறது.

Advertisement

தமிழகத்தில் அறிவிக்கப் படாத மின் வெட்டால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். திமுக அரசு வந்தாலே, பின்னால் மின்வெட்டும் கூடவே வந்துவிடும்.

தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. அதிமுக அரசு ஏழை மக்களுக்கு கொடுத்துஉதவிய பொங்கல் பரிசு மற்றும் பொருள்கள் தற்போது, திமுக ஆட்சியில் நிராகரிக்கப் பட்டுள்ளது. பொங்கல் பரிசு பணம் மக்களுக்கு கொடுக்கப்படவில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.