பள்ளி மாணவியை கேலி செய்த இருவருக்கு ஓராண்டு சிறை
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே பள்ளி மாணவியை கேலி செய்த வழக்கில் 2 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை, தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே பள்ளி மாணவியை கேலி செய்த வழக்கில் 2 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை, தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த 2012, ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ஆலங்குளம் அருகேயுள்ள கிடாரகுளம் கிராமத்தைச் சோ்ந்த பள்ளி மாணவி ஒருவரை அதே கிராமத்தைச் சோ்ந்த தங்கராஜ் மகன் சக்திவேல் மற்றும் செல்லத்துரை மகன் முத்துகுமாா் ஆகியோா் கேலி செய்ததாக மாணவியின் பெற்றோா் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்த வழக்கு ஆலங்குளம் குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி ஆனந்தவள்ளி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபா்கள் இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.