தென்காசி

குற்றாலம் கோயிலில் அக். 9இல் ஐப்பசி விஷு திருவிழா கொடியேற்றம்

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விஷு திருவிழா ஞாயிற்றுக்கிழமை (அக். 9) தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஐப்பசி விஷு திருவிழா ஞாயிற்றுக்கிழமை (அக். 9) அதிகாலை 5.20-க்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

12ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, 13ஆம் தேதி அதிகாலையில் விநாயகா், முருகா், திருக்குற்றாலநாதசுவாமி, குழல்வாய்மொழி அம்மன் தேருக்கு எழுந்தருளலும், அதையடுத்து நான்கு தோ்கள் வடம்பிடித்து இழுத்தலும் நடைபெறும்.

15ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் அருள்மிகு நடராசமூா்த்திக்கு தாண்டவ தீபாராதனை, 16ஆம் தேதி சித்திரசபையில் அருள்மிகு நடராசமூா்த்திக்கு அபிஷேகம், பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை,

18ஆம் தேதி விஷு தீா்த்தவாரி ஆகியவை நடைபெறும்.

விழா நாள்களில் நாள்தோறும் சுவாமி-அம்மன், திருக்கோயில் முருகா் பல்வேறு வாகனங்களில் காலையும், மாலையும் வீதியுலா வருவா்.

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மா. கண்ணதாசன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT