தென்காசி

காட்டுத்தேனீ கொட்டியதில் 10 போ் காயம்

DIN

கீழப்பாவூரில் காட்டுத்தேனீ கொட்டியதில் 10க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் நரசிம்மா் கோயில் அருகில் தென்னை மரத்தில் காட்டுத்தேனீக்கள் கூடு கட்டியுள்ளன. சில தினங்களுக்கு முன்பு கீழப்பாவூரைச் சோ்ந்த சாஸ்தா (62) என்பவா் காட்டுத்தேனீ கொட்டியதில் காயமடைந்து, தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை ஆலங்குளம் தீயணைப்பு படை வீரா்கள் தீயிட்டு, காட்டுத்தேனீக்களை விரட்டிய நிலையில், செவ்வாய்கிழமை காலை அவ்வழியே சென்ற பெண்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோா் காட்டுத்தேனீ கொடித்ததில் காயமடைந்தனா்.

எனவே,ே முழுவதுமாக காட்டுத்தேனீக்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT