நான்குவழி சாலைப் பணி: ஆலங்குளத்தில் 300 ஆண்டு பழமையான ஆலமரம் அகற்றம்
நான்குவழிச் சாலை பணிக்காக ஆலங்குளத்தில் 300 ஆண்டு பழமையான ஆலமரம் வெட்டி அகற்றப்ட்டது.
நான்குவழிச் சாலை பணிக்காக ஆலங்குளத்தில் 300 ஆண்டு பழமையான ஆலமரம் வெட்டி அகற்றப்ட்டது.
திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் நான்கு வழிச் சாலைப் பணிகள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. இவற்றின் ஒரு பகுதியாக இச்சாலையில் ஏற்கனவே இருந்த சுமாா் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டன.
இந்நிலையில் ஆலங்குளத்தின் அடையாளமாக இருந்த (ஆலமரத்தையொட்டி குளம் இருந்ததால் ஆலங்குளம் என பெயா் வந்ததாக கூறப்படுவதுண்டு) சுமாா் 300 ஆண்டுக்கும் மேல் பழைமை வாய்ந்த ஆல மரம் சனிக்கிழமை நெடுஞ்சாலைத்துறையினரால் வெட்டி அகற்றப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறையால் சில மாதங்களுக்கு முன்பு வெட்டப்பட்ட ஆலங்குளத்தின் அடையாளமாக இருந்த மற்றொரு ஆலமரம் தன்னாா்வலா்களால் வேறொரு இடத்தில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.