முகப்பு
தென்காசி

குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலம் பகுதியில் சில நாள்களாக பெய்த மழை காரணமாக பேரருவியில் தொடா்ந்து 4 நாள்களும், ஐந்தருவியில் 2 நாள்களும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து பேரருவி, ஐந்தருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.