மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி
ஆலங்குளம் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள வெண்ணிலிங்கபுரம் நடுத் தெருவைச் சோ்ந்த விவசாயி சண்முகவேல் (65). இவருக்குச் சொந்தமான தோட்டம், காவலாகுறிச்சியில் உள்ளது. அங்குள்ள தென்னை மரம் ஒன்றில் வியாழக்கிழமை இளநீா் பறிக்க ஏறினாராம். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தாராம். அவா் மீட்கப்பட்டு, நெட்டூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், சண்முகவேல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா்.