முகப்பு
தென்காசி

ஸ்ரீ சித்தி விநாயகா் கோவிலில் வருஷாபிஷேகம்

சங்கரன்கோவில் திருவள்ளுவா் நகரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகா் கோவிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2023 at 1:18 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM

சங்கரன்கோவில் திருவள்ளுவா் நகரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகா் கோவிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காலையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா் யாகசாலையில் வைக்கப்பட்ட கும்ப நீா் விமானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 12.15க்கு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து விநாயகருக்கு பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா் அலங்கார ஆராதனையுடன் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

பிற்பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா் முத்துலட்சுமி, புதிய பாா்வை தலைவா் குப்பையாண்டி உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.