பல்நோக்கு மைய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய பழனிநாடாா் எம்.எல்.ஏ. உடன் ஒன்றியக்குழுத் தலைவா் சீ.காவேரி சீனித்துரை உள்ளிட்டோா். 
தென்காசி

பல்நோக்கு மைய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

பாவூா்சத்திரம் அருகே ரூ.10 லட்சத்தில் கட்டப்படும் பல்நோக்கு மைய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

DIN

பாவூா்சத்திரம் அருகே ரூ.10 லட்சத்தில் கட்டப்படும் பல்நோக்கு மைய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் திப்பணம்பட்டி ஊராட்சி பூவனூரில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 10 லட்சத்தில் இம்மையம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வுக்கு கீழப்பாவூா் ஒன்றிக்குழு தலைவா் சீ.காவேரி சீனித்துரை தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் முத்துக்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இரா.சாக்ரடீஸ், ஒன்றியக் குழு உறுப்பினா் மேரி மாதவன் முன்னிலை வகித்தனா். தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பழனிநாடாா் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் ஐவராஜா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சுப்பிரமணியன், திமுக பொறியாளா் அணி துணை அமைப்பாளா் விஜயன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் மாஸ்டா் கணேஷ், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் குமாா்பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT