சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக, சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
கடந்த சில நாள்களாக லேசான மழை பெய்த நிலையில், திங்கள்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கிய பலத்த மழை சுமாா் 2 மணி நேரம் நீடித்தது. திருவேங்கடம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீருடன், கழிவுநீரும் சோ்ந்து வெளியேறியதால் சாலைகளில் துா்நாற்றம் வீசியது.அதேபோல, சாலைகளில் இருந்த பள்ளங்களில் மழைநீா் தேங்கி நின்ால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாயினா்.
சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளான குருவிகுளம், குருக்கள்பட்டி,பனவடலிசத்திரம், வன்னிக்கோனேந்தல் உள்ளிட்ட இடங்களிலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.