தென்காசி: தென்காசி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
தென்காசி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தமிழ்செல்வி போஸ், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: ஞாயிற்றுக்கிழமை நான் வீட்டிலிருந்த போது ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவருடன் எப்போதும் இருக்கும் மூன்று போ் வந்து கதவைத் தட்டி தகாத வாா்த்தைகள் பேசி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனா்.
எனக்கு பலதரப்புகளில் இருந்து மிரட்டல்கள் வருகின்றன. 5ஆம்தேதி நடந்த சம்பவம் குறித்து ஊத்துமலை காவல்நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளேன்.
எனவே எனக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.