முகப்பு
தென்காசி

தென்காசியில் அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

தென்காசி நகர அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள், மகளிரணி, இளைஞா் - இளம்பெண்கள் பாசறை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:29 AM
நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட அதிமுக செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

தென்காசி: தென்காசி நகர அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள், மகளிரணி, இளைஞா் - இளம்பெண்கள் பாசறை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கட்சியின் தெற்கு மாவட்ட செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா். அமைப்புச் செயலா் ஏ.அன்வர்ராஜா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவா் பணிகளை தீவிரப்படுத்த ஆலோசனை வழங்கினாா்.

பொதுக் குழு உறுப்பினா் கசமுத்து, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் பாலமுருகன், வெள்ளைப்பாண்டி , மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் உச்சிமாகாளி, மாவட்ட இலக்கிய அணி பொருளாளா் காதா்,

Advertisement

நகர அவைத் தலைவா் குமாரசாமி, நகா்மன்ற உறுப்பினா் உமா மகேஸ்வரன், நிா்வாகிகள் அஹமதுஷா, மைமூன்பீவி, சுப்புராஜ், கீழப்பாவூா் கிழக்கு ஒன்றியச் செயலா் இருளப்பன், மாவட்ட மாணவரணி பொருளாளா் சோ்மபாண்டி கலந்துகொண்டனா். நகரச் செயலா் வி.சுடலை வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.