ஆலங்குளம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.
ஆலங்குளம்: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.
ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தையைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் அருணாச்சலம்(47). தச்சுத் தொழிலாளியான இவர், மாறாந்தை பிரதான சாலையில் உள்ள ஆனந்தராஜ் என்பவர் வீட்டு மாடியில் வாடகைக்கு வசித்து வந்தார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்து தூங்கியவர் அதிகாலை 4 மணிக்கு, சிறுநீர் கழிப்பதற்காக எழுந்த போது, மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாராம். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | கோடியக்கரை: இலங்கை மீனவர் 2 பேர் கைது
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் போலீசார் அருணாச்சலம் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அருணாசலத்திற்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.