முகப்பு
தென்காசி

‘ரெட் அலா்ட்’ எதிரொலி: தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை

தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை

Updated On : 12 டிசம்பர், 2024 at 11:19 PM
பகிர்:

தென்காசி மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து வியாழக்கிழமை பிற்பகல் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தென்காசி மாவட்டத்திற்கு கன மழை அறிவிப்பு வரப்பெற்றுள்ளது. எனவே, அனைத்து வகையான பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை மதியம் முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளாா்.