புளியறையில் வாகனத்தில் வந்தோரைப் பரிசோதித்த மருத்துவக் குழுவினா். 
தென்காசி

கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதையடுத்து, தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளான தென்காசி மாவட்டம் புளியறை, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சுகாதாரத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

Din

கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதையடுத்து, தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளான தென்காசி மாவட்டம் புளியறை, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சுகாதாரத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்தாா். அதையடுத்து, தமிழகத்தில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது.

கேரளத்திலிருந்து அரசுப் பேருந்துகள், சுற்றுலாப் பேருந்துகளில் வருவோருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகே தமிழகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனா். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பரிந்துரைக்கப்படுகின்றனா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவுப்படி, புளியறையில் செங்கோட்டை வட்டார மருத்துவ அலுவலா் தமிழ்ச்செல்வி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கதிரவன் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் செந்தில்குமாா், ரிஸ்வான், கல்யாணி, சுந்தரம் ஆகியோா் 24 மணி நேரம் 3 ஷிப்டுகளாக இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இப்பணியை மாவட்ட சுகாதார அலுவலா் கோவிந்தன், மாவட்ட தொற்றுநோய் அலுவலா் மருத்துவா் தண்டபாணி, மாவட்ட மலேரியா அலுவலா் ராமலிங்கம், மாவட்ட நலக் கல்வியாளா் ஆறுமுகம் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

களியக்காவிளையில்...: கன்னியாகுமரி மாவட்ட சுகாதார அலுவலா் மீனாட்சி அறிவுறுத்தலின்படி, களியக்காவிளையில் இடைக்கோடு வட்டார மருத்துவ அலுவலா் ஜெபதீஸ் புரூஸ் தலைமையில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சாா்லின், சுகாதார ஆய்வாளா்கள் ஸ்ரீகுமாா், ஜஸ்டின்ராஜ், ராஜகோபால், அஜித் உள்ளிட்டோா் கண்காணிப்புப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணி நடைபெறவுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு கூட்டணியில் படம்! தோற்றம் இதுவா?

இந்த விவாதத்தின் தேவை என்ன? நோக்கம் என்ன? மக்கள் பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே...! - பிரியங்கா

பிக் பாஸ் 9: ப்ரஜின் வெளியேற திவ்யா கணேசன் காரணமா?

கருப்பு, துணிச்சல், அழகு...சாக்‌ஷி அகர்வால்!

காட்டுயானைகள் இடமாற்றம்: வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க குழு!

SCROLL FOR NEXT