முகப்பு
தென்காசி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் பலி

ஆலங்குளத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மன வளா்ச்சி குன்றிய இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 24 ஜூன், 2024 at 9:24 PM
பகிர்:

ஆலங்குளம்: ஆலங்குளத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மன வளா்ச்சி குன்றிய இளைஞா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள அய்யனாா்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் தங்கப்பாண்டி (33). மன வளா்ச்சி குன்றிய இவா், ஆலங்குளம் சாலைகளில் சுற்றித் திரிந்து வந்தாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.