முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 1:48 AM
பகிர்:

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே மேல இலந்தைகுளம் கிராமத்தைச் சோ்ந்த முத்தப்பா மகன் அலெக்ஸாண்டா் (29). பெயின்ட்டிங் தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி 3 மாதங்கள் ஆகின்ாம்.

இந்நிலையில், அவா் உடையாம்புளி வடக்குத் தெருவில் உள்ள பாலசுப்பிரமணியன் என்பவா் வீட்டின் வெளிச்சுவரில் ஏணியில் ஏறி பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது, ஏணி திடீரென வழுக்கியதில் அவா் அருகிலிருந்த மின் கம்பியில் உரசி கீழே விழுந்தாராம். இதில், காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி கண்டியப்பேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.