ஆலங்குளம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
ஆலங்குளம் அருகே புதன்கிழமை, மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே புதன்கிழமை, மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த தனம் மகன் ஜெபராஜ்(46). புதன்கிழமை மாலை அவா் தனது தோட்டத்தில் விவசாயப் பணி மேற்கொண்டிருந்தாராம். அவரது தாய், மனைவி, குழந்தைகள் உடனிருந்தனா்.
அப்போது மிதமான மழை பெய்த நிலையில், ஜெபராஜ் மீது மின்னல் பாய்ந்ததாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு உக்கிரன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலின்பேரில், ஊத்துமலை போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.