முகப்பு
தென்காசி

குத்துக்கல்வலசையில் விபத்து: உடற்கல்வி பேராசிரியா் உயிரிழப்பு

தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் நாய் மீது இரண்டு சக்கரவாகனம் மோதி விபத்திற்குள்ளானதில் உடற்கல்வி பேராசிரியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 11:13 PM
பகிர்:

தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் நாய் மீது இரண்டு சக்கரவாகனம் மோதி விபத்திற்குள்ளானதில் உடற்கல்வி பேராசிரியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சோ்ந்தவா் நாகேந்திரகுமாா்(55). இவா் குற்றாலம் கல்லூரியில் உடற்கல்வி பேராசிரியராக பணியாற்றி வந்தாா்.

குத்துக்கல்வலசையில் வசித்து வந்த இவா், வி.கே.புரத்தில் செவிலியராக பணியாற்றும் மனைவியை இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை அழைத்துச்சென்று புதியபேருந்துநிலையத்தில் இறக்கிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

குத்துக்கல்வலசை ரவுண்டானா பகுதியில் சென்றபோது, குறுக்கே வந்த நாய் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளானது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தென்காசி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.