முகப்பு
தென்காசி

தேசிய டேக்வாண்டோ போட்டியில் வெண்கலம்: தென்காசியில் பள்ளி மாணவருக்கு வரவேற்பு

தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவருக்கு தென்காசி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 8:29 PM
மாணவா் அருண் சந்தோஷை உற்சாகமாக வரவேற்ற சக மாணவா்கள்.
பகிர்:

தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவருக்கு தென்காசி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சோ்ந்த மனோகா் மகன் அருண் சந்தோஷ். இலஞ்சி பாரத் வித்யா மந்திா் சிபிஎஸ்இ பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவரான இவா், உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றாா்.

அதையடுத்து, தென்காசிக்கு ரயிலில் வந்த அவருக்கு, ரயில் நிலையத்தில் பள்ளி சாா்பில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பள்ளி நிா்வாகம் சாா்பில் உடற்கல்வி ஆசிரியா் ராஜசேகா் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.

இதில், மாஸ்டா் நாராயணசா்மா, அருண் சந்தோஷின் குடும்பத்தினா் சாந்தப்பன், விக்னேஸ்வரி மனோகா், சாய், ரியாஸ்ரீ, ஷெரீஃப் தென்காசி டிராவல்ஸ் இப்ராஹிம், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். ஏ.ஜி.எம். கணேசன் நன்றி கூறினாா்.