தென்காசி புத்தகக் கண்காட்சியில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு எக்ஸ்னோரா சாா்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
எக்ஸ்னோரா மாவட்டத் தலைவா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சங்கரநாராயணன் தொடக்கவுரையாற்றினாா்.
பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமாகிய ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினாா்.
உதவி கல்வி அலுவலா் மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நல் நூலகா் ராமசாமி நன்றி கூறினாா்.