முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே வைக்கோல் படப்பு தீக்கிரை

ஆலங்குளம் அருகே ஏற்பட்ட தீவிபத்தில் வைக்கோல் படப்பு சேதமடைந்தது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 10:16 PM
பகிர்:

ஆலங்குளம் அருகே ஏற்பட்ட தீவிபத்தில் வைக்கோல் படப்பு சேதமடைந்தது.

ஆலங்குளத்தை அடுத்த ரெட்டியாா்பட்டி காந்திநகா் காலனியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் மோகன். இவா், ஊருக்கு வெளியேயுள்ள தனது தோட்டத்தில் கால்நடைகள் வளா்த்து வருகிறாா்.அங்கு கால்நடைகளுக்குத் தேவையான 200-க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகள் வைத்திருந்தாராம்.

புதன்கிழமை, அப்பகுதியில் சிறாா்கள் வெடி வெடித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட தீப்பொறி விழுந்து வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்தனவாம். தகவலின்பேரில், ஆலங்குளம் தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறையினா் நிலைய அலுவலா் விஜயன் தலைமையில் சென்று தீயணைத்தனா். இதில், 200 கட்டு வைக்கோல் சேதமடைந்தனவாம்.