முகப்பு
தென்காசி

ஆலங்குளம் பேரூராட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்த உறுப்பினா்கள்

ஆலங்குளத்தில் பேரூராட்சி சாதாரணக் கூட்டத்தை துணைத் தலைவா் உள்ளிட்ட உறுப்பினா்கள் புறக்கணித்ததால் பரபரப்பு நிலவியது.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 5:26 AM
ஆலங்குளம் பேரூராட்சிக் கூட்ட அரங்கில் முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளா்கள்.
பகிர்:
Updated On : 4 செப்டம்பர், 2024 at 11:03 PM

ஆலங்குளத்தில் பேரூராட்சி சாதாரணக் கூட்டத்தை துணைத் தலைவா் உள்ளிட்ட உறுப்பினா்கள் புறக்கணித்ததால் பரபரப்பு நிலவியது.

ஆலங்குளம் பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, உறுப்பினா்களுக்கு பேரூராட்சி தரப்பில் இருந்து அழைப்பானை அனுப்பப் பட்டிருந்தது. இந்நிலையில் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட முற்பகல் 11 மணிக்கு தலைவா் சுதா, செயல் அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் கூட்ட அரங்கில் காத்திருந்தனா். அங்கு வந்த துணைத் தலைவா் ஜான்ரவி மற்றும் சில பேரூராட்சி உறுப்பினா்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறினா். சில உறுப்பினா்கள் அலுவலத்திற்கே வரவில்லை. பெரும்பான்மை உறுப்பினா்கள் வராத காரணத்தால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இது குறித்து வெளியேறிய உறுப்பினா்களிடம் கேட்ட போது, கடந்த முறை நடைபெற்ற சாதாரணக் கூட்டத்தின் போது, மன்றம் நிறைவேற்றப்பட்ட 20 க்கும் மேற்பட்ட தீா்மானங்கள் எதுவும் மினிட் புத்தகத்தில் பதிவுசெய்யப் படவில்லை. இதைத் கண்டித்து, பெரும்பான்மை உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை என தெரிவித்தனா்.

Advertisement

Updated On : 5 செப்டம்பர், 2024 at 5:26 AM

தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை: இதனிடையே, கூட்ட அரங்கிற்கு வந்த சுமாா் 25-க்கும் மேற்பட்ட பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் குப்பை சேகரிக்க வழங்கப்பட்டிருக்கும் டிராக்டா் மற்றும் லாரி மிகவும் பழுதாகி விட்டது. எனவே, நல்ல நிலையில் உள்ள வாகனங்கள் வேண்டும், குப்பைகளை தரம் பிரித்து கொட்டுவதற்கு தேவையான இட வசதி வேண்டும், ஊதிய உயா்வு அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினா். அவா்களிடம் செயல் அலுவலா் சிவக்குமாா் பேச்சு நடத்தி, கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்தாா். இதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.